சிறுநீரகக் கோளாறு காரணமாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஆசையா? தோசையா? என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் தொழில் முறையில் அக்கு பஞ்சர் மருத்துவர் ஆவார். 2018 டிசம்பர் மாதம் இவர் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அரசியல் கட்சிகளிலும் தொடர்பில் இருந்த சீனிவாசன் 2013-ல் மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

விளம்பரம்

இந்த நிலையில் நேற்று மாலை தன்னுடைய பயணத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை  பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஒரு வார காலம் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சையை மேற்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க – கடல் பாறையில் நடிகை யோகா.. காதலன் கண்முன்னே நடந்த சோகம்: திக் திக் கடைசி நிமிடம்!

விளம்பரம்

மருத்துவர்களின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க உள்ளார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்.

.

  • First Published :



Source link