Last Updated:

‘இந்தியன் 2’ திரைப்படம் இயக்குனர் ஷங்கருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

News18

கேம் சேஞ்சர் படத்துக்காக நடிகர் ராம்சரணுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளது என இயக்குனர் சுகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தந்தை என இரண்டு கேரக்டரில் ராம்சரண் நடித்திருக்கிறார்.

இவருடன் கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்த படத்திலிருந்து வெளியாகி உள்ள பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன.

‘இந்தியன் 2’ திரைப்படம் இயக்குனர் ஷங்கருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதனால் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த படத்தை அதிக பொருள் செலவில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்துள்ளார்.

இதையும் படிங்க – தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் கதை… இணையத்தில் கவனம் பெறும் தகவல்…

இவர் தமிழில் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் சிறப்பு காட்சியை ‘புஷ்பா 2’ படத்தின் இயக்குனர் சுகுமார் பார்த்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ”கேம் சேஞ்சர் படத்தை நான் சிரஞ்சீவியுடன் பார்த்தேன். இந்த படத்துடைய முதல் பாதி அற்புதமாக உள்ளது. இன்டர்வல் காட்சி மற்றும் ஃப்ளாஷ்பேக் கிளைமேக்ஸ் காட்சிகள் நெருப்பு போன்று இருக்கிறது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்காக ராம் சரணுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவும் வாய்ப்புள்ளது என இயக்குனர் சுகுமார் தெரிவித்திருக்கிறார்.





Source link