Last Updated:

2023- 24 ரஞ்சிக் கோப்பைத் தொடரில், மும்பை அணியில் விளையாடிய தனுஷ் கோட்டியான் தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மகாராஷ்டிரா வீரர் தனுஷ் கோட்டியான் முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 26 வயது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மெல்போர்னில் நாளை மறுதினம் தொடங்குகிறது. 4-ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான தனுஷ் கோட்டியான் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் தனுஷ் கோட்டியான், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அண்மையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்திற்கு தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். யுஸ்வேந்திர சஹல், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசினாலும், தனுஷ் கோட்டியானின் பேட்டிங் திறனுக்காக அணியில் இடம் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

முதல் தர கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி தனுஷ் கோட்டியான் சாதனை படைத்துள்ளார். 2023- 24 ரஞ்சிக் கோப்பைத் தொடரில், மும்பை அணியில் விளையாடிய தனுஷ் கோட்டியான் தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த தனுஷ் கோட்டியான்?

இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த ஆஃப் ஸ்பின்னிங் ஆல்-ரவுண்டராக அறியப்படும் தனுஷ் கோட்டியான், மும்பை அணி 42வது ரஞ்சி பட்டத்தை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அந்த தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 5 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 41.83 சராசரியில் 502 ரன்கள் குவித்தார். 2024 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஒரேயொரு போட்டியில் விளையாடி 24 ரன்கள் எடுத்த அவருக்கு ஐபிஎல்லில் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், சமீபத்தில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியும் தனுஷ் கோட்டியானை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தற்போது இந்திய தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

Also Read | நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற பி.வி. சிந்து திருமணம்… மத்திய அமைச்சர் வெளியிட்ட ஃபோட்டோ வைரல்

கோட்டியானின் பர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் புள்ளிவிவரங்கள் அவரின் ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்துகின்றன. 33 முதல் தர போட்டிகளில் 41.21 சராசரியில் 2523 ரன்கள் குவித்துள்ள அவர், 101 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நம்பர் 8ல் இறங்கி, சதம் அடிக்கும் திறமை கொண்டவர். அதனாலேயே, அதே திறமை கொண்ட அஸ்வினுக்கு மாற்றாக தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.



Source link