Last Updated:

Nayanthara | ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

News18

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மற்றுமொரு தமிழ் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ 2 ஆண்டுகளுக்கு பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. வெறுமனே திருமண வீடியோவாக இல்லாமல், “Nayanthara: Beyond the Fairy Tale” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியானது.

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு தனுஷ் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Also read: Cinema | ‘கரகாட்டக்காரன்’, ‘த்ரிஷ்யம்’ படங்கள் இந்த நடிகை நடிக்க வேண்டியது… யார் தெரியுமா?

இந்நிலையில், இதே ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறி, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கே இன்னும் முடியாத நிலையில், நயன்தாராவுக்கு தற்போது மற்றொரு சிக்கலும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.



Source link