Last Updated:

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

News18

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற பெயரில் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தியதாகக் கூறி, ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தரப்பில், “திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வொண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது.

இதையும் வாசிக்க: OTT Spot | எந்த ஓடிடியில் மோகன்லாலின் ‘பரோஸ்’ படத்தை பார்க்கலாம்?

படப்பிடிப்பு காட்சிகள் 2020ம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024 ம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில், “இந்தப் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும் போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்பந்தமிடப்பட்டு, அதில் அவரும் கையெழுத்திட்டுள்ளார்.

படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் வொண்டர்பாருக்கு சொந்தமானது” எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



Source link