பண்டிகை கால டிமாண்டை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் (Goods & Services Tax- GST) நவம்பர் மாதத்தில் 1.82 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக இந்த வருடம் 8.5 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டு புதிய மறைமுக வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து கிடைத்துள்ள இரண்டாவது பெரிய அளவிலான வசூல் தொகை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 2.1 ட்ரில்லியன் ரூபாய் GST வசூல் செய்யப்பட்டது. நவம்பர் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட வரியானது அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ட்ரான்ஸாக்ஷன்களின் எதிரொலியாகும். ஜூலை மாதத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த GST வசூல் 11.6 சதவீதம் அதிகரித்து 10.6 ட்ரில்லியன் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கணிக்கப்பட்டது.
நவம்பர் மாதத்தில் 19,259 கோடி ரூபாய் டேக்ஸ் ரீபண்ட் தொகையாக வழங்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட 8.9 சதவீதம் குறைவு. டேக்ஸ் ஃரீபண்டுகளுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் மத்திய அரசு 34,141 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் மாநிலங்களை பொறுத்தவரை இது 43,047 கோடி ரூபாயாக உள்ளது. இறக்குமதிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற விற்பனை மூலமாக கிடைத்த வருவாயானது 91,828 கோடி ரூபாய் மற்றும் இதற்கான மேல் வரி 13,253 கோடி ரூபாய் . மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை மூலமாக கிடைக்கும் வருவாய் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்படுகிறது.
ஆரோக்கியமான வளர்ச்சி மாநிலங்களைப் பொறுத்தவரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் 25 சதவீதம், பீகாரில் 12 சதவீதம், சிக்கிம் மாநிலத்தில் 52, சதவீதம் மிசோரம் மாநிலத்தில் 16 சதவீதம், திருப்புரா மாநிலத்தில் 18 சதவீதம், அசாம் மாநிலத்தில் 10%, ஒடிசா மாநிலத்தில் 10%, டெல்லியில் 18% என்ற ஆரோக்கியமான GST வருவாய் வளர்ச்சி நவம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது.
அதாவது இந்த மாநிலங்களில் அதிக பொருளாதார செயல்பாடு நடைபெற்று இருப்பதை இது குறிக்கிறது. GST வரி வசூலில் ஒட்டுமொத்த வளர்ச்சி காணப்பட்டாலும் ஹரியானா மாநிலத்தில் 2 சதவீதம், பஞ்சாப் மாநிலத்தில் 3 சதவீதம், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் தலா 5%, தமிழ்நாட்டில் 8 சதவீதம் மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 3 சதவீதம் என்ற ஒற்றை இலக்க அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் எதிர்மறையான வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
செயலற்ற அக்கவுண்ட்ஸ்களை மீண்டும் ஆக்டிவேஷன் செய்ய நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கும் SBI
டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் வரி வசூல் சமீபத்தில் அதிகரித்து இருப்பதற்கு பண்டிகை காலமே காரணம். எனினும் இதனை விரிவான பொருளாதாரத்திற்கான வளர்ச்சிக்கான அறிகுறியாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்று டாக்ஸ் பார்ட்னர் சௌரப் அகர்வால் கூறியுள்ளார். செப்டம்பர் 2024 காலாண்டுக்கான சமீபத்திய GDP தகவல் வெளியானதையொட்டி அடுத்த 4 மாதங்களுக்கு குறைவான வரி வசூல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
.