நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரச தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படும் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே ஓரளவு மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Source link