நாடளாவிய ரீதியில் சட்ட ரீதியாக மருந்தகங்களை முன்கொண்டு நடத்துவதற்கு பாரியளவில் மருந்தாளர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றதாக தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் ஹேமந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் கூடிய விரைவில் மருந்தாளர்களை உள்ளீர்ப்பதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இதன் காரணமாக அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உரிய பயிற்சியுடன் கூடிய மருந்தாளர்களை உள்ளீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஹேமந்த விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.



Source link