போக்குவரத்து பொலிஸாரின் பணிப்புரையை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இன்று (21) காலை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, கடமையிலிருந்த பொலிசாருடன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பொலிசார் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கோரினர்.
இதன்போது ஆவணங்களை வழங்க மறுத்ததுடன், பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.
இன்று (21) காலை அர்ச்சுனா எம்.பி நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவத்தை அவர் எதிர்கொண்டுள்ளார்.