நாம் எந்த மண்ணில் நிற்கிறோமோ அந்த மொழியில் பேச வேண்டும் என்றும், அந்த மண்ணை மதிக்க வேண்டும் என்றும் நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற புஷ்பா-2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, தயாரிப்பாளர் தாணு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன், சென்னையில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கட்டடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படம் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

விளம்பரம்

தொடர்ந்து தமிழில் பேசிய அல்லு அர்ஜூனை தெலுங்கில் பேசுமாறு ரசிகர்கள் கூச்சலிட்டனர்.

அதற்கு பதிலளித்த அல்லு அர்ஜூன், தான் ஒரு சென்னை பையன் என்றும், நாம் எந்த மண்ணில் நிற்கிறோமோ, அந்த மண்ணையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்றார். அதுதான் அவர்களுக்கு கொடுக்கும் கவுரவம் என்றும் கூறினார்.

.



Source link