Last Updated:

யுவேந்திர சாஹல் மற்றும் தன ஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோ, வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.

Yuzvendra Chahal

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவரின் மனைவி பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சாஹல். இவர் சினிமா துறையில் நடன இயக்குனராக இருக்கும் தன ஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் முடித்தார். இருவரும் இணைந்து ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்கு முன்பே இருவரும் ஜோடியாக நின்று பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்கள். இந்திய அளவில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட இந்த ஜோடி கடந்த 2020 டிசம்பர் 11ஆம் தேதி திருமணம் முடித்தனர்.

அதற்கு முன்பே இருவரும் காதலித்து டேட்டிங்கில் இருந்தனர். தன ஸ்ரீயின் ஏராளமான நடன வீடியோக்களை யுவேந்திர சாஹல் பார்த்திருக்கிறார். அதன் அடிப்படையில் தனஸ்ரீயிடம் நடனம் கற்றுக் கொள்வதற்காக அவருடைய மாணவராக சேர விரும்புவதாக சாஹல் விருப்பம் தெரிவித்தார். இதன் பின்னர் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து வெளியிட்ட வீடியோக்கள் அதிக கவனத்தை பெற்றன. இந்நிலையில் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. மேலும் இருவரும் விவாகரத்து செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என இருவருக்கும் நெருங்கியவர்கள் தங்களது பெயரை வெளியிட விரும்பாமல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக யுவேந்திர சாஹல் மற்றும் தன ஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோ, வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யக்கூடும் என அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வதந்திகளுக்கு தனஸ்ரீ வர்மா எதிர்வினையாற்றியுள்ளார். இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த சில நாட்களாகவே எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிக கடினமாக இருக்கிறது. உண்மையாகவே வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், ஆதாரமில்லாத வதந்திகள், உண்மையை சரிபார்க்காமல் சொல்வது, வெறுப்பை பரப்பும் ட்ரோல்களால் என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதுதான்.

Also Read | மொத்தமாகவே பாகிஸ்தானில் இருந்து மாறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்? – ஐசிசி திடீர் முடிவின் பின்னணி!

எனக்கான நல்ல பெயரை கட்டமைக்க நான் பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளேன். எனது மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல; வலிமையின் அடையாளம். எனவே, என்னைப் பற்றிய உண்மையின் மீது மட்டுமே கவனம் செலுத்தி முன்னேறி செல்வதை நான் தேர்வு செய்ய விரும்புகிறேன். உண்மை உயர்ந்து நிற்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சில நாட்கள் முன்பு சாஹல் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “கடின உழைப்பு மக்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. உங்கள் பயணம் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலி உங்களுக்குத் தெரியும். நீங்கள் இங்கு வருவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உலகம் அறியும். நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்கள் தந்தையை பெருமைப்படுத்த உங்கள் வியர்வையை சிந்தி உழைத்தீர்கள். உங்கள் தாய் எப்போதும் பெருமையாக நிமிர்ந்து நிற்பார்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link