Last Updated:

Moto G05 மொபைல் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஒரு பெரிய 6.67-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் கவர்ச்சிகரமான டிசைனை கொண்டுள்ளது.

News18

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டில் தனது முதல் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோனான மோட்டோ ஜி-5 மொபைலை அறிமுகப்படுத்தி உள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான சீரிஸ்களில் ஜி-சீரிஸ் ஒன்றாகும். இந்த சீரிஸில் இடம்பெறும் மொபைல்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல பிரீமியம் அம்சங்களையும் யூஸர்களுக்கு வழங்குகிறது.

விலை: புதிய மோட்டோ ஜி05 இந்தியாவில் ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கும். வரும் ஜனவரி 13, 2025 அன்று நண்பகல் 12 மணி முதல் இந்த மொபைலின் விற்பனை தொடங்கும். இந்த போன் Flipkart, Motorola.in மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும். ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் பிளம் ரெட் என 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வீகன் லெதர் டிசைனை கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: இந்த மொபைல் 1000-நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்டுள்ள 6.67-இன்ச் டிஸ்ப்ளேவை பெற்றுள்ளது. இந்த டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் 3 ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், இந்த டிஸ்ப்ளே செக்மென்ட்டில் கிடைக்க கூடிய டிவைஸ்களிலேயே மிகவும் பிரகாசமானது என்று கூறுகிறது. மேலும் இதிலிருக்கும் அடாப்டிவ் ஆட்டோ மோட்-ஆனது கன்டென்டை பொறுத்து ரெஃப்ரஷ் ரேட்டை 90Hz-லிருந்து 60Hz-ஆக அட்ஜஸ்ட் செய்து, பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது.

கூடுதலாக இது டால்பி அட்மாஸால் இயக்கப்படும் 7x பாஸ் பூஸ்டுடன் கூடிய டுயூல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவை கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளேவில் வாட்டர் டச் தொழில்நுட்பம் உள்ளது, இது ஈரமான அல்லது வியர்வையுடன் கூடிய கைகளால் டிஸ்ப்ளேவை தொட்டால் கூட ஆப்ரேட் ஆகும். கூடுதல் பாதுகாப்பிற்காக IP52 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, மோட்டோ ஜி05 அதன் பிரிவில் ஆண்ட்ராய்டு 15-ஐ கொண்ட ஒரே ஸ்மார்ட் ஃபோன் ஆகும். முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆண்ட்ராய்டு 15 மேம்பட்ட பிரைவஸி கன்ட்ரோல், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டிவைஸை தனிப்பயனாக்குவதற்கான அதிக ஃபிளக்ஸிபிளிட்டியை வழங்குகிறது.

இந்த மொபைலின் பின்பக்கம் குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் 50-MP கேமரா சிஸ்டமே கொண்டுள்ளது மற்றும் நைட் விஷன் மோட்-ஐ கொண்டுள்ளது. தெளிவான செல்ஃபிக்களுக்காக ஃபேஸ் ரீடச் உடன் இணைக்கப்பட்ட 8MP ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போர்ட்ரெய்ட் ஃபோட்டோகிராஃபி, டைம் லேப்ஸ், லைவ் ஃபில்டர், பனோரமா மற்றும் லெவலர் போன்ற பல கேமரா அம்சங்ககளை கொண்டுள்ளது. கூகுள் ஃபோட்டோ எடிட்டர், மேஜிக் அன்ப்ளர், மேஜிக் எரேசர் மற்றும் மேஜிக் எடிட்டர் போன்ற கூடுதல் டூல்ஸ்களுடன் இந்த டிவைஸ் வருகிறது.

மீடியாடெக் ஹீலியோ ஜி81 எக்ஸ்ட்ரீம் ப்ராசஸர் இதில் உள்ளது. இந்த மொபைலில் உள்ள RAM பூஸ்ட் அம்சம் மேம்பட்ட மல்டிடாஸ்கிங்கிற்காக 12GB வரையில் RAM-ஐ விரிவாக்கி கொள்ள அனுமதிக்கிறது. கூடுதலாக மைக்ரோ SD கார்ட் மூலம் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கி கொள்ள முடியும். குறிப்பிடத்தக்க வகையில் இந்த மொபைல் மூன்று சிம் கார்டு ஸ்லாட்களை கொண்டுள்ளது.18W சார்ஜிங் ஸ்பீடை சப்போர்ட் செய்யும் 5200mAh பேட்டரி இதில் உள்ளது. மொபைலை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் பேட்டரி லைஃப் 2 நாட்கள் வரை நீடிக்கும் என நிறுவனம் கூறுகிறது.



Source link