Last Updated:
கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். எஸ். ஜே. சூர்யா வில்லன் கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்துள்ளார்
ஷங்கர் இயக்கத்தில் நாளை வெளியாகும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக விடுமுறை அல்லாத தினங்களில் 4 காட்சிகள் திரையிடப்படும் அதில் கூடுதலாக ஒரு காட்சி திரையிட்டு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளை ஒருநாள் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட்டு கொள்ள அனுமதி அளித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்ததாக ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஐஏஎஸ் அதிகாரி கேரக்டரில் ராம்சரண் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலமாக ராம் சரணின் மார்க்கெட் இந்திய அளவில் அதிகரித்து இருக்கிறது.
இந்தி மொழியில் போட்டியாக மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில் கேம் சேஞ்ச் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் இந்த திரைப்படம் வசூலை அள்ளி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படம் தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.
எஸ். ஜே. சூர்யா வில்லன் கேரக்டரில் இடம் பெற்றுள்ளார். தமன் இசையமைத்துள்ள இந்த படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்துள்ளார்.
January 09, 2025 5:01 PM IST