பிரிவினைவாத தலைவரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடா குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்துவந்த ஹர்தீப் சிங் நிஜார், அங்கு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
கனடா பிரதமரின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இரு நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் தூதர்களை வெளியேற உத்தரவிட்டது மோதல் போக்கை அதிகரித்தது.
இந்த விவகாரம் இப்படியே நீடித்த நிலையில், இந்தியாவில் உள்ள கனடா தூதர் ஸ்டூவர்ட் வீலருக்கு சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தது. அதேபோல், இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் ஆறு பேர் வெற்றப்பட்டனர்.
இந்நிலையில், நிஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு பங்கு உண்டு என்பதற்கான வலுவான ஆதாரம் தங்களிடம் இல்லை என கனடா பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது. நிஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு உள்ளது என்பதற்கான உளவுத்துறை தகவலை மட்டுமே இந்திய அரசிடம் பகிர்ந்துகொண்டோம். மேலும், நிஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்காமல், தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கனடா பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் :
8 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. பயணிகளின் நிலை என்ன? – அசாமில் பரபரப்பு!
இந்நிலையில், நிஜார் கொலை வழக்கு தொடர்பான ஆதாரங்களை முன்வைக்காமல், இருநாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியது ட்ரூடோ தான் என்று இந்திய வெளியுறவுதுறை அதிகாரி ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
.