வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மாட்டுப்பாளை பாலம் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு போக்குவரத்துக்கள் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் இவ்வீதி ஊடான போக்குவரத்து நேற்று (28) முதல் இடம்பெற்று வருவதுடன், மறுஅறிவித்தல் வரும் வரை கனரக வாகனங்கள் இதனூடாக பயணம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இது ஓரிரு நாட்களில் சீர் செய்யப்படுமெனவும் அதன் பின்னர் கனரக வாகனங்கள் இந்த வீதியால் பயணம் செய்ய முடியுமெனவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட்.எம். அஸ்மீர் தெரிவித்தார்.

 

The post நிந்தவூர் மாட்டுப்பாளை பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது appeared first on Thinakaran.



Source link