நயன்தாரா – தனுஷ் இடையேயான மோதல் விவகாரம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், தனுஷின் நட்புக்காக சம்பளமே வாங்காமல் நயன்தாரா நடித்துக் கொடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை தனுஷே உறுதிப்படுத்தி பெருமையாக பேசியுள்ளார்.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் மற்றும் பாடலைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக தனுஷ் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

அறிக்கையில், “உங்களைப் போல் அப்பா, அண்ணன் என குடும்ப பின்னணி வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. என் மீதும் தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனுஷ் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக” பகிரங்க புகார் கூறிய நயன்தாரா, “கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது” என்றும் தனுஷை விமர்சித்திருக்கிறார் நயன்தாரா.

Also Read |
Exclusive | “எதுவாக இருந்தாலும் நடிகர் தனுஷ் பதிலளிப்பார்” – நயன்தாரா குற்றச்சாட்டு குறித்து வழக்கறிஞர் சொன்னது என்ன?

விளம்பரம்

தனுஷ் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு எந்தப் பதிலும் இல்லாத நிலையில், தனுஷின் நட்புக்காக சம்பளமே வாங்காமல் நயன்தாரா நடித்துக் கொடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை தனுஷே உறுதிப்படுத்தி பெருமையாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘எதிர்நீச்சல்’. இப்படத்தில், தனுஷுடன் ஒரு பாடலுக்கு கெஸ்ட் ரோலில் நடனமாடியிருப்பார் நயன்தாரா. இதற்காக நயன்தாரா சம்பளமே வாங்காமல் நடித்ததாக தனுஷே பின்னாளில் காபி வித் டிடி நிகழ்ச்சியில் தெரிவித்திருப்பார்.

சிவகார்த்திகேயனுடன் அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “நயன்தாரா எங்கள் நண்பர். எங்களுக்கு அவர் நெருக்கம். எதிர்நீச்சல் படத்தின் பாடலுக்காக சம்பளம் கூட அவர் வாங்கவில்லை. நாங்கள் கேட்டோம் என்பதற்காக ‘நீங்கள் என் நண்பர். உங்களுக்காக நான் எதையும் பெறமாட்டேன்’ எனக் கூறி இலவசமாக நடனமாடி சென்றார்.” என்று கூறியிருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

தனுஷ் – நயன்தாரா மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தனுஷ் நயன்தாராவை பாராட்டி பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

.





Source link