இந்தியாவில் உள்ள பல கஸ்டமர்கள், அதிலும் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய ஹோம் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போது, அதற்கான காரணம் தெரியாமல் குழப்பமடைகின்றனர். எனவே கடனுக்கான நிபந்தனைகள் எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது மற்றும் நிர்வகிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்வது அவசியம். தேவையான தகவல்கள் அனைத்தையும் கடன் வழங்குனருக்கு கொடுத்த பிறகும் கூட ஹோம் லோன் அப்ளிகேஷன் நிராகரிக்கப்படுவதற்கான காரணம் குறித்து யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா?

ஆச்சரியமூட்டும் விதமாக இதற்கு முக்கிய காரணம் உங்களுடைய வயது. வங்கிகள் ஒரு சில நேரங்களில் கடன்களை வயதின் அடிப்படையில் அங்கீகரிக்கலாம். 40 வயதிற்கு மேற்பட்ட கடன் பெறுபவர்கள் பெரும்பாலும் ஒரு சில சவால்களை சந்திப்பார்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு கடன் கொடுப்பதற்கு வங்கிகள் சற்று தயங்குகின்றன. ஒரு லோனை பெறுவதில் வயதான கடன் பெறுபவர்கள் என்னென்ன மாதிரியான சவால்களை சந்திக்கிறார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.

விளம்பரம்

40 வயதிற்கு மேற்பட்டவர்களின் பணம் சம்பாதிக்கும் காலம் குறைவாக இருக்கும். இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிக ரிஸ்க்கில் இருக்கும். இதன் காரணமாக இதுபோன்ற கடன் பெறுபவர்களுக்கு வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை விதிக்கின்றனர்.

வயதான கடன் பெறுபவர்களை கடன் வழங்குனர்கள் பொதுவாக அதிக ரிஸ்க் கொண்ட கடன் பெறுபவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். ஏற்கனவே அவர்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட பகுதி கடன்களுக்காகவும், செலவுகளுக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கும். இதனால் கடன் வழங்குனர்கள் கண்டிப்பான நிபந்தனைகளை இவர்களுக்கு விதிக்கின்றனர்.

விளம்பரம்

கடன் வாங்குபவர்களின் ஓய்வு காலம் வரையிலான கால அளவை கடன் வழங்குனர்கள் கருத்தில் எடுத்துக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே கடனை திருப்பிச் செலுத்தும் திறனை அவர்கள் முடிவு செய்கின்றனர். எனவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்போதும் குறைவான கால அளவு கொண்ட லோன்களே அங்கீகரிக்கப்படும். இது குறிப்பாக நிலையான வருமானம் பெறுபவர்களுக்கு சவாலானதாக அமைகிறது.

இதையும் படிக்க:
PM கிசான் 19வது தவணை: தேதி, பெனிபிஸியரி ஸ்டேட்டஸ், விண்ணப்பிப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

விளம்பரம்

40 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடைகளை மீறி கடன் பெற உதவும் எளிமையான யுத்திகள்:-

கடன் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களுக்கு ஒத்துவராத நிபந்தனைகளோடு கடன் பெறுவதற்கு ஒருபோதும் சம்மதிக்காதீர்கள். தேவையான நேரத்தை எடுத்து பல்வேறு கடன் ஆப்ஷன்களை ஆய்வு செய்து, ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான சரியான ஒன்றை உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், கடன் தொகை மற்றும் வட்டி அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். எனினும் அதே நேரத்தில் பல கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது உங்களுடைய கிரிடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

விளம்பரம்

இதையும் படிக்க:
FD Interest Rates | ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் திட்டம் உள்ளதா? வட்டியை மாற்றி அமைத்துள்ள 5 வங்கிகள்

உங்களுடைய கிரெடிட் வரலாறு என்ன? இதற்கு முன்பு நீங்கள் வாங்கிய கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துகிறீர்களா? உங்களுடைய தற்போதைய கடனுக்கும் வருமானத்திற்குமான விகிதம் என்ன? இது போன்ற விஷயங்களை சரிபார்த்துவிட்டு கடனுக்கு விண்ணப்பிப்பது நல்லது.

அதிக டவுன் பேமெண்ட் தயார் செய்வதன் மூலமாக வயதை பொருட்படுத்தாமல் ஹோம் லோன் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் அதிகரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு டவுன் பேமெண்ட் தொகையை நீங்கள் செலுத்த தயாராக இருப்பதால் கடன் வழங்குனரின் ரிஸ்க் குறைகிறது. இதனால் அவர்கள் உங்களுக்கு சாதகமான கடன் நிபந்தனைகளுடன் கடன் வழங்குவதற்கு தயாராக இருப்பார்கள்.

விளம்பரம்
நீங்கள் ஏன் ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆச்சரியமான 6 காரணங்கள்.!


நீங்கள் ஏன் ஊறுகாய் சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆச்சரியமான 6 காரணங்கள்.!

சவால்கள் மற்றும் அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை தெரிந்து கொள்வதன் மூலம் கடன் பெறுபவர்கள் ஹோம் லோன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

.



Source link