கடந்த சில ஆண்டுகளாக பணம் செலுத்தும் முறைகள் மற்றும் அனுபவங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் டிஜிட்டல் வாலட்ஸ்கள் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளன. Paytm, Amazon Pay போன்ற வால்ட்ஸ் ஆப்ஷன்கள் UPI அறிமுகமாவதற்கு முன்பே சிக்கல் இல்லாத டிஜிட்டல் பேமென்ட் அனுபவத்தை யூஸர்களுக்கு வழங்கின.
Merchant ஆப்ஸ்களுடன் வாலட்ஸ்களை லிங்க் செய்வதன் மூலம், யூஸர்கள் ஒரே கிளிக்கில் பணம் செலுத்த முடியும். கார்டு விவரங்களை உள்ளிடுதல், 3D செக்யூர் ப்ரோட்டோகால்ஸை பயன்படுத்துதல் அல்லது நெட் பேங்கிங்கில் உள்ள மல்டி-ஸ்டெப் லாகின் மற்றும் OTP ப்ராசஸ்களுக்கு உட்படுதல் போன்ற சிக்கலான அங்கீகார செயல்முறைகள் தேவையில்லை. எனினும் இதில் உள்ள நடைமுறை சிக்கலாக பார்க்கப்பட்டது என்னவென்றால், யூஸர்கள் தங்கள் அக்கவுன்ட்டில் உள்ள பணத்தை வாலட்ஸ்களுக்கு அனுப்பிக் கொள்ள வேண்டும்.
ஆனால் UPI (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பணம் செலுத்த உதவுவதன் மூலம் டிஜிட்டல் பேமென்ட் ஆட்டத்தையே மாற்றியது. 4-இலக்க / 6-இலக்க PIN மூலம் பணம் செலுத்துவதை எளிதாகவும், வேகமாகவும் மாற்றியிருக்கிறது UPI. இந்த நிலையில் UPI-ல் UPI Lite என்ற ஆப்ஷன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதன் பயன்பாடு குறித்து தெரியாமல் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். எனவே உங்கள் மொபைலின் பேமென்ட் ஆப்-ல் உள்ள UPI லைட் என்றால் என்ன? இந்த அம்சத்தைப் பற்றிய அனைத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
UPI Lite என்றால் என்ன?
இது UPI-ன் எளிமைப்படுத்தப்பட்ட வெர்ஷனாகும். குறிப்பாக சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. UPI Lite வாலட்டில் பணத்தை ஆட் செய்வதன் மூலம், UPI பின்-ஐ பயன்படுத்தாமலேயே சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்ய யூஸர்களுக்கு உதவுகிறது. குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு PIN என்டர் செய்யும் தேவையில்லாமல், ஒரே கிளிக்கில் பணம் செலுத்த UPI Lite அனுமதிக்கிறது. UPI லைட்டின் சமீபத்திய வளர்ச்சி யூஸர்களுக்கு இந்த ஆப்ஷனை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்கியுள்ளது. அவற்றுள் முக்கியமான இரண்டு.
ஆட்டோ டாப்-அப் அம்சம்:
GFF-ன் போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், UPI லைட்டை மேனுவலாக லோட் செய்வதை சிரமமாக நினைக்கும் யூஸர்களுக்கு உதவியாக உள்ளது. தற்போது UPI Lite-ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்புக்குக் கீழே வாலட் இருப்புத் தொகை குறையும்போது தானாகவே டாப்-அப் செய்து, தடையற்ற கட்டண அனுபவத்தை உறுதி செய்கிறது. இது மொபைல் வாலட்ஸ்களில் பிரபலமாக இருக்கும் ஆட்டோ-ரீசார்ஜ் செயல்பாட்டைப் போன்றது.
பரிவர்த்தனை வரம்புகள்:அதிகரிப்பு:
ஆரம்பத்தில் ரூ.200-ஆக இருந்த UPI Lite-ன் ஒரு பரிவர்த்தனை வரம்பு ரூ.500-ஆகவும் பின்னர் ரூ.1,000-ஆகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல யுபிஐ லைட்டின் வாலட் லிமிட்டும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000-ல் இருந்து ரூ.5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
Gold Loan: தங்க நகை கடன் வாங்க போறீங்களா..? அப்போ இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க..!
UPI லைட்டிற்கு மேலும் தேவைப்படும் மேம்பாடுகள்:
UPI லைட் பல நன்மைகளை அளிக்கும் அதே நேரம், சில மேம்பாடுகளும் தேவைப்படுகிறது. UPI லைட் தற்போது ஆப்ஸ் சார்ந்தது மற்றும் இந்த interoperability-ஐ பகிர்ந்து கொள்ளவில்லை. எனவே யூஸர்கள் ஒவ்வொரு PSP/TPAP பயன்பாட்டிற்கும் தனித்தனி UPI லைட் பேலன்ஸ்களை உருவாக்க வேண்டியிருப்பது யூஸர் அனுபவத்தை சிக்கலாக்கும். பிளாட்ஃபார்ம்ஸ் முழுவதும் பேங்க் அக்கவுன்ட் இணைக்கப்பட்டுள்ளதை போல, பல ஆப்ஸ்களில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
யூஸர்கள் தங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட்ஸ்களை பார்ப்பதை போலவே, தங்களின் அனைத்து UPI லைட் அக்கவுண்ட்ஸ், பேலன்ஸ் மற்றும் ட்ரான்ஸாக்ஷன் ஹிஸ்ட்ரி ஓவர்வியூவை ஒரே இடத்தில் அணுக வசதி இல்லை. தற்போது, ஒரு யூஸர் தனது UPI லைட் அக்கவுண்ட்ஸ்களை எங்கு கிரியேட் செய்தார் என்பதை நினைவில் கொள்வது கடினமாக உள்ளது, மேலும் வெவ்வேறு பிளாட்ஃபார்ம்களில் பேலன்சை கண்காணிப்பது சவாலானது. எனவே ஒரு ஒருங்கிணைந்த, தரப்படுத்தப்பட்ட ஸ்டேட்மென்ட் சிஸ்டம் இருப்பது யூஸர் அனுபவம் மற்றும் வெளிப்படைத் தன்மையை கணிசமாக மேம்படுத்தும்.
இதையும் படிக்க:
FD-யில் இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை போடாதீங்க..? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?
எனினும் UPI லைட் சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிதாக்குவதில் ஒரு முக்கிய படியாகும். ஆட்டோ டாப்-அப்ஸ் மற்றும் பரிவர்த்தனை வரம்பு உயர்வு போன்ற சமீபத்திய மேம்பாடுகள் கேம்-சேஞ்சர்களாகும். எனினும் மேற்கண்டதைப் போன்ற சில மேம்பாடுகள் தேவை. இவைகளை நிறைவேற்றிவிட்டால் மில்லியன் கணக்கான இந்தியர்களின் அன்றாட கட்டண அனுபவத்தை மேம்படுத்துவதற்கான உறுதியான டூலாக UPI லைட் இருக்கும்.
.