Last Updated:
பஞ்சாப் நேஷனல் பாங்க் வாடிக்கையாளர்கள், இந்த தேதிக்குள் தங்களுடைய KYC விவரங்களை பதிவேற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC விவரங்களை அப்டேட் செய்வதற்கு கடைசி தேதியை அறிவித்துள்ளது. இந்த தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC விவரங்களை பதிவேற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவதில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விதிமுறைகளுக்கு இணங்க இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் பேங்க் அதன் வாடிக்கையாளர்களை ஜனவரி 23, 2025 -ற்குள் தங்களுடைய அக்கவுண்டுகளுக்கு ‘நோ யுவர் கஸ்டமர்’ (KYC) (Know Your Customer) தகவலை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. அக்கவுண்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் இதனை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
KYC டாக்குமென்ட்கள்: KYC இணக்கத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களுடைய அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ், சமீபத்திய புகைப்படம், PAN கார்டு அல்லது படிவம் 60, வருமான சான்றிதழ், மொபைல் நம்பர் அல்லது வேறு ஏதேனும் KYC சம்பந்தப்பட்ட தகவல்களை அப்டேட் செய்யும்படி ஆலோசிக்கப்பட்டு உள்ளனர். வாடிக்கையாளர்கள் இதனை எந்த ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
KYC ஆன்லைன்: KYC விவரங்களை அப்டேட் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் ஜனவரி 23, 2025 வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதனை PNB ONE/ இன்டர்நெட் பேங்கிங் சேவைகள் அல்லது பதிவு செய்யப்பட்ட இமெயில் போஸ்ட் மூலமாக நிறைவு செய்யலாம் என்பதை வங்கி தெரிவித்து உள்ளது.
குறிப்பிட்ட இந்த கால அவகாசத்திற்குள் KYC விவரங்களை அப்டேட் செய்ய தவறும் பட்சத்தில் அக்கவுண்ட் செயல்பாடுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மீடியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது சம்பந்தமான ஏதேனும் உதவிக்கு வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு நேரடியாக செல்லலாம் அல்லது அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடலாம்.
ஒருவேளை உங்களுடைய KYC விவரங்களை நீங்கள் இன்னும் அப்டேட் செய்யவில்லை என்றால் உடனடியாக அதனை செய்து விடுவது நல்லது.
January 15, 2025 1:34 PM IST