Last Updated:

இவரது இயக்கத்தில் வெளிவந்த டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

News18

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இயக்குனரான அஜய் ஞானமுத்து தனது நீண்ட நாள் காதலியை திருமணம் முடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான வேலைகளால் அஜய் ஞானமுத்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் வெளிவந்த டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விக்ரமை வைத்து இவர் கோப்ரா என்ற படத்தை இயக்கினார். இந்த படத்துக்கு மிகப்பெரும் வரவேற்பு காணப்பட்டாலும் வர்த்தக ரீதியில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து அவரது வெற்றி படமான டிமாண்டி காலனியின் இரண்டாவது பாகத்தை சமீபத்தில் எடுத்து வெளியிட்டார்.

இந்த படம் முதல் பாகத்தை போன்று மிகப்பெரும் வெற்றியை பெற்றது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாகி அஜய் ஞானமுத்துவுக்கு ஒரு கம்பேக்கை கொடுத்தது. இந்நிலையில் அஜய் ஞானமுத்து தனது நீண்ட நாள் காதலியை நேற்று திருமணம் முடித்தார்.

இதையும் படிங்க – Gautham Vasudev Menon | தனுஷின் அந்தப் படத்தை நான் இயக்கவில்லை.. கௌதம் மேனன் கொடுத்த அதிர்ச்சி

இந்த திருமண விழாவில் மணமக்கள் வீட்டினர் முன்னணி திரையுலகத்தினர், பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அஜய் ஞானமுத்து அடுத்ததாக விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.



Source link