Last Updated:

திருவாரூர் மாவட்டத்தில் சாலையில் வெடி வெடித்து மதுபோதையில் ரகளை செய்த சினிமா துணை வில்லன் நடிகர்களான இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறியதால் பாய்ந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?

News18

திருவாரூர் மாவட்டத்தில் சாலையில் வெடி வெடித்து மதுபோதையில் ரகளை செய்த சினிமா துணை வில்லன் நடிகர்களான இரட்டையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறியதால் பாய்ந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாரதிராஜா – பாரதமணி. இரட்டை சகோதரர்களான இருவரும் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து தீபாவளி அன்று வெளியான “பிரதர்” படத்தில் துணை வில்லன்களாகவும், அதேபோல் “மழைக்கு பிடிக்காத மனிதன்”, சூர்யா நடித்த “சிங்கம்” போன்ற பல படங்களில் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் குடிபோதையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக வெடி வெடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியை மேற்கொண்ட எடையூர் காவலர் தனபால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என கூறி அவர்களை தட்டி கேட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: Vishal | நடிகர் விஷால் நிலைக்கு நான் தான் காரணமா? – இயக்குநர் பாலா விளக்கம்

இதனை கேட்காத துணை நடிகர்கள் இருவரும் காவலர் தனபாலிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “நீ என்னா பெரிய ஆளா!.. எங்களுக்கு டிஜிபி, ஐஜி எல்லாரையும் தெரியும்” என்று கூறித் தகாத வார்த்தைகளால் போலீசாரை பேசியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோவாக பதிவு செய்த காவலர் தனபால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எடையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துணை நடிகர்கள் பாரதிராஜா, பாரதமணி ஆகிய இருவரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Source link