நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் உற்பத்திக்கான விலையை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்து நெல் உற்பத்திக்கான விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த விலைக்கேற்பவே நெல் கொள்வனவு இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையும் நிர்ணயிக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடைவள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.