Last Updated:

அஜித் ஓட்டி பயிற்சி எடுத்த கார் சமீபத்தில் விபத்தை சந்தித்தது. ஆனால் எந்த காயமும் இன்றி அஜித்குமார் தப்பினார். அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித் குமார் அணியில் நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர்.

News18

அஜித் குமார் கார் ரேஸ் அணியினர் டிரைவர் மாற்று பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமாரின் கார் ரேசிங் அணி துபாயில் நடக்கும் கால்பந்தயப் போட்டியில் கலந்து கொள்கிறது. வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.  இதற்கான பயிற்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அதில் அஜித் ஓட்டி பயிற்சி எடுத்த கார் சமீபத்தில் விபத்தை சந்தித்தது. ஆனால் எந்த காயமும் இன்றி அஜித்குமார் தப்பினார்.

அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித் குமார் அணியில் நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர்.  இந்தப் போட்டியில் 42 அணிகள் இடம்பெறுகின்றன.  இந்த கார்பந்தயத்தில் ஒரு அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து காரை ஓட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு லேப் முடிந்தவுடன், அடுத்த வீரர் மாற்றி கார் ஓட்ட வேண்டும். அதற்கான பயிற்சியில் அஜித் அணியினர் ஈடுபட்டனர். அந்த வீடியோவை அஜித்குமார் ரேஸிங் அணி வெளியிட்டுள்ளது.

படங்களை பொறுத்த அளவில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இம்மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு தகவல்கள் பரவின. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனமான லைகா தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க – சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… இணையத்தில் கவனம் பெறும் போஸ்டர்…

விடாமுயற்சி படத்துடைய புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடித்துள்ள மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து அடுத்ததாக அஜித் எந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.





Source link