Last Updated:

பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவம்

News18

பசியால் தவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை இஸ்ரேல் ராணுவம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் போர் முற்றுகையால் பாலஸ்தீனத்துக்குள் அத்தியாவசியப் பொருள்கள் நுழைவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பசியால் வாடிவருவதாக ஐ.நா கூறி இருந்தது.

இதேபோல, நார்வேவைச் சேர்ந்த அகதிகள் கவுன்சில், காஸாவுக்கு அனுப்பப்படும் 83 சதவீத உதவிகளைத் தடுத்துவருவதால், அவர்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்பிய உணவுப் பொருளில் மணல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அத்தியாவசிய பொருளான சர்க்கரை பைகளில் வெறும் மணல் நிரப்பப்பட்டிருந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்களும், அண்டை நாட்டு மக்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்.. வரிசை கட்டி நிற்கும் முன்னணி நிறுவனங்கள்

அண்மையில் உணவு உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆய்வாளர் மைக்கேல் ஃபக்ரி ஐ.நா அவையில் சமார்பித்த அறிக்கையில், உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார நிலை காரணமாகவும், இஸ்ரேலிய இராணுவத்தாலும், பாலஸ்தீனர்களின் உயிருக்கு  அச்சுறுத்தல்கள் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

பசியால் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்கு பதில் மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல்





Source link