தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரின் மகனாக தனது முதல் படத்தில் அறிமுகம் ஆனாலும், அந்த படம் அந்த நடிகருக்கு படு தோல்வியை கொடுத்தது. இருப்பினும் தனது விடாமுயற்சி, கடின உழைப்பால் சமீபத்தில் 1200 கோடி ரூபாய் வசூலித்த படத்தின் ஹீரோவாக அந்த நடிகர் மாறி இருந்தார்.
இங்கு நாம் குறிப்பிடுவது தெலுங்கில் தற்போது முன்னணி நட்சத்திரமாக மாறி உள்ள ராம்சரணைப் பற்றித்தான். நடிகர் சிரஞ்சீவியின் மகனாக மிகப்பெரிய பொருட்செலவுடன் தனது முதல் படத்தில் ராம்சரண் அறிமுகமானார். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன படத்தை ராம் சரணுக்காக தெலுங்கில் ரீமேக் செய்தார்கள். இந்த படம் அவருக்கு மிகப்பெரும் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தோல்வியை சந்தித்ததுடன் ராம் சரணுக்கு எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்தது.
“சிறுடா” என்ற இந்த படம் 2007 இல் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. ரிலீசான முதல் நாளில் மட்டும் இந்த படம் 4 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால் அதற்கு பின்னர் கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் சரியாக ஓடவில்லை. இருப்பினும் நடிகர் ராம்சரண் தன் மீதான விமர்சனங்களை சரி செய்து அடுத்தடுத்த வருடங்களில் சூப்பர் ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
மகதீரா, ஆரஞ்சு, நாயக், எவடு, கோவிந்துடு அந்த கல்லூரி வாட, புரூஸ் லீ தி பைட்டர், துருவ், ரங்கஸ்தலம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ராஜமவுலி இயக்கிய RRR திரைப்படம் ராம்சரணின் திரையுலக வாழ்க்கையில் உச்சத்தை தொட்டது.
இந்த படத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகச் சிறந்த அங்கீகாரம் கிடைத்ததுடன், ஆஸ்கார் விருதும் இந்த படத்திற்கு வழங்கப்பட்டது. தனது முதல் படம் படுதோல்வி சந்தித்த போதிலும் RRR படத்தின் மூலமாக நடிகர் ராம்சரண் 1200 கோடி ரூபாய் வசூல் செய்த படத்தின் ஹீரோவாக மாறி உள்ளார்.
இதேபோன்று RRR படத்திற்கு பின்னர் ராம்சரண் தனது சம்பளத்தை 45 கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்பு அவர் 20 கோடி ரூபாய் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள இயக்குனர் சங்கரின் “கேம் சேஞ்சர்” என்ற திரைப்படம் பொங்கலையொட்டி ஒட்டி திரைக்கு வர உள்ளது.
.