மொபைல் வாங்க நினைப்பவர்கள் பட்ஜெட் விலையில் வாங்குவதற்கு ஏற்ப, சிறந்த போன்களில் ஒன்றாக Poco F6 உள்ளது. தற்போது Flipkart-ன் பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் விற்பனையிலும் பெரும் தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது.
ஃபிளிப்கார்ட்டில் Poco F6 மொபைல் விலை: Poco F6 மொபைலானது தற்போதைய Flipkart Big Billion Days விற்பனையின் போது ரூ.23,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த மொபைல் இந்தியாவில் ரூ 29,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது எந்த நிபந்தனையும் இன்றி ரூ 6,000 குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்: இந்த மொபைல் 12-பிட் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது யூஸர்களுக்கு மென்மையான 120Hz ரெஃப்ரஷ் ரேட் , ஷார்ப்பான 446 ppi பிக்சல் டென்சிட்டிமற்றும் அதிக 480Hz டச் சேம்ப்ளிங் (பதில்) ரே ட்டை வழங்குகிறது. இந்த மொபைலில் கொடுக்கப்பட்டுள்ள ஹை-குவாலிட்டி டிஸ்ப்ளே HDR10+, Dolby Vision மற்றும் Widevine L1 உள்ளிட்டவற்றை சப்போர்ட் செய்து, யூஸர்களுக்கு நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்கிறது. மேலும் இந்த மொபைலின் ஸ்கிரீனானது ஃபிளாக்ஷிப் டிவைஸ்களில் இருக்கும் டாப்-என்ட் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் கோட்டிங் ப்ரொட்டக்ஷனை கொண்டுள்ளது. எனவே ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் டிவைஸ்களில் சிறந்த டிஸ்ப்ளே கொண்ட மொபைல்களில் ஒன்று Poco F6 என சொல்லலாம்.
இதையும் படிக்க:
செல்போன்ல இருக்கிற இந்த சிறிய துளைய கவனிச்சிருக்கீங்களா… எதுக்கு தெரியுமா?
Poco F6 மொபைலில் Qualcomm நிறுவனத்தின் புதிய Snapdragon 8s Gen 3 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது யூஸர்களுக்கு சக்திவாய்ந்த செயல்திறனை வழங்கும். குறிப்பாக இந்த சிப் Snapdragon 8 Gen 3 SoC-ன் டோன்ட் வெர்ஷனாகும். மேலும் ரூ. 40,000க்கு மேல் விலையுள்ள போன்களில் இந்த சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. இந்த மொபைல் மூன்று வருட முக்கிய ஆண்ட்ராய்டு OS அப்டேட்ஸ்களையும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்சஸ்களையும் பெறும் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த மொபைல் ஃபாஸ்ட் 120W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைலின் பின்பக்கம் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் உடன் கூடிய 50MP Sony IMX882 பிரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா அடக்கம். மொபைலின் முன்பக்கம் செல்ஃபிக்கள் மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 20MP OV20B ஃப்ரன்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் Dolby Atmos-க்கான சப்போர்ட்டுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் ஃபோனில் பயோமெட்ரிக்ஸிற்காக இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்-பிரின்ட் சென்சார் உள்ளது.
.