Last Updated:
Vodafone idea prepaid plans | கால்ஸ் மற்றும் டேட்டாவிற்காக அரிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பிளான்களை வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது யூஸர்களுக்காக சமீபத்தில் 2 புதிய பட்ஜெட்-ஃபிரென்ட்லி ப்ரீபெய்ட் பிளான்களை அறிவித்தது. ரூ.150க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளான்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் கிடைக்கின்றன.
தங்கள் Vi சிம்மை கால்ஸ் மற்றும் டேட்டாவிற்காக அரிதாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய பிளான்கள் ஏற்றவையாகும். மேலும் அதிக செலவில்லாமல் தங்கள் சிம்மை ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் யூஸர்களுக்கு ஏற்ற பிளான்களாகவும் இவை இருக்கின்றன. இந்த 2 புதிய பிளான்களில் மலிவாக கிடைக்கும் பிளானின் விலை ரூ.128 ஆகும்.
இந்த பிளான் 18 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 100 MB டேட்டாவுடன் வருகிறது. நீங்கள் பெரும்பாலும் வைஃபை பயன்படுத்துபவர் என்றால், இது போதுமானதாக இருக்கும். இந்த பிளான் 10 லோக்கல் ஆன்-நெட் நைட் மினிட்ஸ்களை யூஸர்களுக்கு வழங்குகிறது. இதை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். அனைத்து லோக்கல் மற்றும் நேஷனல் கால்ஸ்களுக்கு விநாடிக்கு 2.5 பைசா செலவாகும். இருப்பினும், இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் SMS அனுப்ப முடியாது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ள மற்றொரு ப்ரீபெய்ட் பிளானின் விலை ரூ.138 ஆகும். இந்த பிளான் 20 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. மேற்கூறிய பிளானை போலவே, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை 10 லோக்கல் ஆன்-நெட் நைட் மினிட்ஸ் மற்றும் 100MB மொபைல் டேட்டாவை யூஸர்கள் பெறுவார்கள். மேலும், இதற்கு முன் பார்த்த பிளானை போலவே அனைத்து லோக்கல் மற்றும் நேஷனல் கால்ஸ்களுக்கும் விநாடிக்கு 2.5 பைசா செலவாகும். மேலும், யூஸர்கள் இந்த மலிவு விலை பிளானை ரீசார்ஜ் செய்தாலும் எந்த எஸ்எம்எஸ்-ம் அனுப்ப முடியாது.
இதையும் படிக்க: 43 மணி நேரம் வரை பேட்டரி ஆயுள்… ஒன்பிளஸ் பட்ஸ் ஏஸ்2 இயர்பட்ஸ் அறிமுகம்..!
வோடஃபோன் ஐடியா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள மேற்கண்ட ரூ.128 மற்றும் ரூ.138 பிளான்கள் தற்போது நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் கிடைக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இவை மகாராஷ்டிரா மற்றும் கோவா, கர்நாடகா, சென்னை, கேரளா மற்றும் கொல்கத்தா போன்ற சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இதனிடையே சமீபத்தில் நிறுவனம் அதிக டேட்டாவை பயன்படுத்தும் யூஸர்களுக்காக புதிய “சூப்பர் ஹீரோ” ப்ரீபெய்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியது. இது 12AM முதல் 12PM வரை அன்லிமிட்டட் மொபைல் டேட்டாவை யூஸர்களுக்கு வழங்குகிறது.
இதையும் படிக்க: ரூ.601க்கான ஜியோவின் ஓராண்டிற்கான அன்லிமிடெட் 5ஜி டேட்டா ப்ளான்: முழு விவரம் இதோ…!
தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க விரும்பும் யூஸர்களுக்கு மலிவு விலையில் விருப்பங்களை வழங்குவதை மேற்கண்ட இந்த புதிய ப்ரீபெய்ட் பிளான்கள் நோக்கமாக கொண்டுள்ளன.
December 30, 2024 2:04 PM IST