Last Updated:

“பட வெளியீட்டிற்கு முன் படத்தை பற்றி அதிகம் பேசக்கூடாது. படம் வெளியான பிறகு அது back fire ஆகும்” என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News18

“பட வெளியீட்டிற்கு முன் படத்தை பற்றி அதிகம் பேசக்கூடாது. படம் வெளியான பிறகு அது back fire ஆகும்” என இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மணிகண்டன் நடித்துள்ள ‘குடும்பஸ்தன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் கதையை துல்கர் சல்மானிடம் கொண்டு சேர்த்து, அவர் படத்தில் நடிக்க தேதி கொடுக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் படத்தை நிறுத்தி விடலாம் என சொல்லி விட்டார்.

குடும்ப உறுப்பினர்கள், உதவி இயக்குனர்கள் என யாரிடம் இதை சொல்லவில்லை. அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் இந்த படத்தின் தயாரிப்பாளர். நான் ‘குடும்பஸ்தன்’ பார்த்துவிட்டேன். நன்றாக உள்ளது. பட வெளியீட்டிற்கு முன் படத்தை பற்றி அதிகம் பேசக்கூடாது. படம் வெளியீட்டுக்கு பிறகு back fire ஆகும். இந்த படத்தில் வைசாக் அற்புதமாக இசையை கொடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க: நெல்லை இசை நிகழ்ச்சி வரவேற்பால் இளையராஜா உற்சாகம்… புதிய அறிவிப்பை வெளியிட்டார்..

ஒரு சில நடிகர்களின் வளர்ச்சி உத்வேகமாக இருக்கும். உதாரணமாக ரஜினிகாந்த் எங்கிருந்தோ சினிமா பயணத்தை தொடங்கி தற்போது இங்கு உள்ளார். அதேபோல சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது அமரன் படம் மூலம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இப்படி சில வருடங்கள் கழித்து உங்களின் பெயரும் இருக்கும் மணிகண்டன். நீங்கள் ஒரு இன்ஸ்பயர் ஆன நடிகராக எதிர்காலத்தில் இருப்பீர்கள்” என தெரிவித்துள்ளார்.



Source link