எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6,500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 40, பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்களில் புலனாய்வு உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link