Last Updated:

நேரடியாக போரில் ஈடுபட்ட படாவிட்டாலும் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் ஏற்படுத்துவதன் மூலம் உக்ரைனுக்கு தொடர் ஆதரவை வழங்கி வருகிறது அமெரிக்கா.

News18

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே ரஷ்யாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது முதல் பதவி காலத்தில் ஏராளமான அதிரடிக்கைகளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டிருந்தார்.

புதிதாக பொறுப்பேற் பின்னர் முக்கிய அறிவிப்புகளை ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக முந்தைய அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இயற்கை பேரிடர்களை அரசு சரியான முறையில் கையாள தவறிவிட்டது என்றும், இதனால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் இழப்புகள் ஏற்பட்டிருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

தனது முதல் பதவி காலத்தின் போது அமெரிக்க எல்லையை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிபெயர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் அதனை நிறைவேற்றுவதில் அவருக்கு பல சவால்கள் இருந்தன.

இந்நிலையில் தெற்கு எல்லை பகுதியான மெக்சிகோவில் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வர முயல்பு அவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடக்கும் போரில் அமெரிக்க அரசு தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. நேரடியாக போரில் ஈடுபட்ட படாவிட்டாலும் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகள் ஏற்படுத்துவதன் மூலம் உக்ரைனுக்கு தொடர் ஆதரவை வழங்கி வருகிறது அமெரிக்கா.

இதையும் படிங்க – Sheikh Hasina | “என்னை கொல்ல சதி; 25 நிமிடங்களில் மரணத்தில் இருந்து தப்பித்தேன்” – பகீர் ஆடியோவை வெளியிட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா!

இந்நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் தேவைப்பட்டால் கூடுதல் பொருளாதார தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைதி உடன்படிக்கையை ரஷ்யா ஏற்க மறுத்தால் அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.

தமிழ் செய்திகள்/உலகம்/

பதவியேற்ற முதல்நாளே ரஷ்யாவுக்கு வார்னிங்.. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய அறிவிப்பு



Source link