மண்டபத்தில் கடத்தலுக்கு வைக்கப்பட்டிருந்த 1,290 சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர். பொது ஏலம் விடப்படுவதால் வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவித்தார் வட்டாட்சியர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி, மண்டபம், வேதாளை ஆகிய பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் கடத்தல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்கிருந்து, போதைப்பொருள், தங்கம், பீடி இலை, மஞ்சள், கடல் அட்டை, காலணிகள் போன்றவை கடத்தல்காரர்கள் மூலம் அவ்வப்போது கடத்தப்படுவதும், காவல்துறையினரும் கடத்தல்காரர்களைப் பிடித்து கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி மண்டபம் காவல்துறையினர் சார்பில் மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,290 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு இதுவரையிலும் யாரும் உரிமை கோரவில்லை.

இதையும் வாசிக்க: “ஒன்னுமே இல்ல எல்லாம் போச்சு – இதுக்கு மேல நாங்க எப்படி வீடு கட்ட முடியும்” – கோர முகத்தை காட்டிய ஃபெஞ்சல் புயல்…

இதனால், ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் மஞ்சள் பொது ஏலமானது டிசம்பர்-5-ஆம் தேதி (நாளை)மாலை 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் வணிகர்கள், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டு பயனடையுங்கள் என வட்டாட்சியர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link