கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போக்குவரத்து பரிசோதனையின் போது மொரட்டுவ பிரதேசத்தில் பயணிகளை நடுவில் இறக்கிவிட்டு பின்வாங்கிய பேரூந்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த தலைவர், தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் பேரூந்து ஊழியர்களுக்கும் பேரூந்து சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்ய நம்புவதாக தலைவர் மேலும் கருத்து தெரிவித்தார்.
The post பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பிச் சென்ற பேரூந்தின் உரிமம் இரத்து appeared first on Daily Ceylon.