திருநெல்வேலி வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி மாணவர்கள் வட ஆப்பிரிக்காவின் துனிசிய அறிவியல் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச கண்டுபிடிப்பு இறுதி மெகா போட்டியில் பங்கேற்று விருது பெற்றுள்ளனர்.

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். கல்லூரியின் செயற்கை நுண்ணறிவியல் துறை (ஏ.ஐ) மாணவர்கள் திறன் பயிற்சி மூலம் புதிய திட்டங்களைக் கண்டுபிடித்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். வட ஆப்பிரிக்காவில் துனிசியா அறிவியல் நகரில் நடைபெற்ற சர்வதேசக் கண்டுபிடிப்பு மெகா போட்டியில், அந்தந்த நாடுகளில் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

இதில் இந்தியா, கனடா, அமெரிக்கா, எகிப்து, கென்யா, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன. இப்போட்டியில் 200 திட்ட கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. அதுபோல இந்திய அளவில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட எப்.எக்ஸ். கல்லூரியின் செயற்கை அறிவியல் துறை மாணவர்கள் குழுவினர் சாம் ராபின் சிங் (3ஆம் ஆண்டு AI&DS), விஷ்ணு சஞ்சய் குமார் (2ஆம் ஆண்டு AI&DS), சுஜய் எஸ் (II AI & DS) ஆகியோர் இறுதி மதிப்பாய்வில் கனடா அணியுடன் போட்டியிட்டு கெளரவமான விருதைப் பெற்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க: இயற்கை தரும் அற்புத பானம்… பதநீர் எப்படி கிடைக்குது தெரியுமா..?

எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் அக்ரி விஸ்ஏஐ பயிர் உற்பத்தியை மேம்படுத்த ஏ.ஐ அடிப்படையிலான ஸ்மார்ட் கிட் திட்டத்தை சமர்ப்பித்தனர். இது இன்டர்நெட் ஆப் திங்ஸ் செயற்கை நுண்ணறிவு (ஐ.ஓ.டி . ஏ.ஐ திட்டம்) மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்களின் ஒருங்கிணைப்பு ஆகும். அதாவது பருவநிலை மாற்றங்கள் மற்றும் விவசாயத்தில் துணை அளவுருக்கள் ஆகியவற்றை துல்லியமாக அளவிடுகிறது, அதிக மகசூலைப் பெறுவதற்கு பொருத்தமான பயிர் வகையை பரிந்துரைக்கிறது.

விளம்பரம்

இந்த மாணவர் குழுவிற்கு செயற்கை நுண்ணறிவியல் துறை தலைவர் முனைவர் அனிதா ஆலோசகராக செயல்பட்டார். இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் முனைவர் வேல்முருகன், துறை தலைவர் முனைவர் அனிதா மற்றும் மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் முனைவர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link