Last Updated:

ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது பவுலிங்கில் திணறியது

News18

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து உள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் இருக்கின்றன.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. இதையொட்டி இந்திய அணி தனது பயிற்சியை இன்று தொடங்கியது. இதில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் பங்கேற்றனர்.

பணிச்சுமை காரணமாக இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது தனது தொடையை பிடித்துக் கொண்டு பும்ரா சிரமப்பட்டதை பார்க்க முடிந்தது.

இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் பும்ரா பந்து வீசினார். இருப்பினும் அவருக்கு ஏற்பட்டிருப்பது லேசான காயம் தான் என்றும் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் எனவும் இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்திருக்கிறார்.

Also Read: அஸ்வின் சாதனையை முறியடித்த பும்ரா… டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்…

தற்போது இந்திய அணியின் ஃபிசியோ பும்ராவை கண்காணித்து வருகிறார். ஏற்கனவே இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது பவுலிங்கில் திணறியது. இந்நிலையில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் 3-ஆவது டெஸ்டில் பும்ரா பங்கேற்பாரா என்ற சந்தேகம் தற்போது இருந்துள்ளது.



Source link