Last Updated:

Pongal Sale: பொங்கல் பண்டிகைக்குத் தேவையான காய்கறி, கரும்பு முதல் பொங்கல் பானை, பழங்கள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

X

Pongal

Pongal Sale: பரபரக்கும் பொங்கல் வியாபாரம்… ஒரு கட்டு கரும்பு எவ்வளவு தெரியுமா…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படைத்து நன்றி தெரிவிப்பார்கள்.

மேலும், கரும்பு மற்றும் பல வகைப்பட்ட உணவுகளைச் சுவைத்து உண்டு மகிழ்வார்கள். இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

ஒரு கட்டு கரும்பு ரூபாய் 700 முதல் 800 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் அவற்றின் விலையும் சிறிது உயர்ந்து உள்ளது. அத்துடன் பொங்கல் பானை விற்பனையும் களைகட்டி உள்ளது. குறிப்பாகப் பலவண்ணங்கள் பூசப்பட்ட பானைகள் அடுக்கி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: Rekla Race: பொங்கல் பண்டிகை வீர விளையாட்டு… ஜல்லிக்கட்டுக்கு சற்றும் குறைவில்லாத ரேக்ளா ரேஸ்…

நாகர்கோவில், வடசேரி, கம்பளம், பார்வதிபுரம், செட்டிகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாத்திரக் கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பெண்கள் பொங்கல் பண்டிகை அன்று வீட்டின் முன் ரங்கோலி, பொங்கல் வாழ்த்து உள்ளிட்ட பலவகையான வண்ண வண்ணக் கோலம் பெரிய அளவில் போடுவார்கள். பொங்கலை ஒட்டி பெண்கள் கோலமிட வசதியாக வண்ண வண்ண கோலப்பொடிகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளன.

இந்நிலையில் நாகர்கோவிலில் பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கிழங்கு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகள் சிறப்பு கண்காட்சி விற்பனை நடைபெறுகிறது. ஒரே இடத்தில் கரும்பு முதல் மண்பானை வரை பொங்கல் சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்து வாங்கிச் செல்கின்றனர்.

மேலும், தலைப்பொங்கல் கொண்டாடும் புதுமணத் தம்பதியினருக்குப் பெண் வீட்டார் சார்பில் சீதனப் பொருட்களாகக் கரும்பு, காய்கறி, பச்சரிசி, பழ வகைகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வழங்கப்படும். இதையொட்டி இந்தப் பொருட்களின் விற்பனைகள் கடைகளில் சூடு பிடித்துள்ளது. சில கடைகளில் சீதனப் பொருட்கள் அடங்கிய பேக்கேஜ் என மொத்தமாகப் பொருட்களை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link