மருத்துவச் செலவுகள், வீட்டை மராமத்து பார்ப்பது அல்லது சுற்றுலா செல்வது போன்ற உங்களுடைய எந்த தேவைக்கு வேண்டுமானாலும் விரைவாக பணம் பெற்றுத் தருவதற்கு பர்சனல் லோன் உதவும். ஆனால் பர்சனல் லோன் வாங்குவதற்கு அனைவரும் தகுதி பெறுவதில்லை. கடன் வாங்குபவர் கடனை சரியாக திருப்பி செலுத்துவாரா என்பதை முடிவு செய்வதற்கு கடன் வழங்குனர்கள் பல்வேறு தகுதி வரம்புகளை அமைத்திருப்பார்கள். அவற்றை தெரிந்து கொள்வது பர்சனல் லோன் வாங்குவதற்கான நம்முடைய செயல்முறையை மிகவும் எளிமையாக்கும்.

விளம்பரம்

பர்சனல் லோன்களை புரிந்து கொள்ளுதல்

பர்சனல் லோன் என்பது எந்த ஒரு அடமானமும் இல்லாமல் வழங்கப்படும் ஒரு லோனாக உள்ளது. பல்வேறு காரணங்களுக்காக பர்சனல் லோன் பெறலாம். அடமானம் இல்லாத காரணத்தால் இதற்கு பெரும்பாலும் அதிக வட்டி வசூல் செய்யப்படுகிறது.

பர்சனல் லோன்களுக்கான தகுதி வரம்புகள்

இந்தியாவில் ஒரு பர்சனல் லோன் பெறுவதற்கு ஒருவர் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. வயது, வருமானம், வேலை, கிரெடிட் ஸ்கோர் மற்றும் ஏற்கனவே இருக்கக்கூடிய கடன்கள் ஆகியவை முக்கியமான தகுதி வரம்புகளாக அமைகின்றன. பெரும்பாலும் கடன் வழங்குனர்கள் 21 வயது முதல் 60 வயது வரையிலான நிலையான வருமானம் பெறும் நபர்களையே பர்சனல் லோன்களுக்கு தேர்வு செய்கின்றனர். மேலும் வலிமையான கிரெடிட் ஸ்கோர் இருப்பதும் நிச்சயமாக அவசியம். இந்த தகுதி வரம்புகளை பூர்த்தி செய்யும் நபருக்கே பர்சனல் லோன்கள் குறைவான வட்டியில் கொடுக்கப்படும்.

விளம்பரம்

பர்சனல் லோன் தகுதி வரம்புகளை பாதிக்கும் விஷயங்கள்

இருப்பிடம்

ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தார் போல அந்தந்த இடத்தில் வசிப்பதற்கான செலவு மாறுபடும். எனவே இருப்பிடம், உங்களுடைய பர்சனல் லோன் அங்கீகரிக்கப்படுவதற்கான ஒரு காரணமாக அமைகிறது.

வேலை செய்யும் நிறுவனம்

நீங்கள் நல்ல புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால் உங்களுக்கு எளிதாக பர்சனல் லோன் கிடைத்துவிடும்.

வருமானம்

பர்சனல் லோன் பெறுவதற்கு உங்களிடம் வருமானத்திற்கான மூலம் இருக்க வேண்டும். உங்களுடைய வருமானம் எவ்வளவு அதிகமாக உள்ளதோ உங்களுக்கு அவ்வளவு பெரிய தொகை பர்சனல் லோனாக கிடைக்கும்.

விளம்பரம்

கிரெடிட் ஸ்கோர்

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் அதாவது 750க்கும் அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருப்பது உங்களுக்கு எளிமையாக பர்சனல் லோன் பெற்றுத்தரும்.

இதையும் படிக்க:
SBI vs PNB: 3 வருட ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஒரு ஒப்பீடு!!!

நிலையான வேலை

ஒரு நல்ல நிறுவனத்தில் நிலையான ஒரு வேலையில் இருப்பது கடனை நீங்கள் திருப்பி செலுத்திவிடுவீர்கள் என்ற நம்பிக்கையை கொடுக்கும்.

ஏற்கனவே இருக்கும் கடன்கள்

உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருந்தால் புதிய லோன்கள் பெறுவதற்கான உங்களுடைய வாய்ப்பு குறையலாம்.

விளம்பரம்

சொந்த வீடு

உங்களுக்கு சொந்தமாக வீடு இருந்தால் வீட்டு வாடகை போன்ற பொருளாதார தேவைகள் குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு எளிதாக பர்சனல் லோன் கிடைக்கலாம்.

பர்சனல் லோனுக்கான தகுதி வரம்புகள்

நாட்டினம்: இந்தியாவின் குடிமகன்

வயது: 21 முதல் 68

வேலை: மாத வருமானம் (அரசு, தனியார், MNC), சுய தொழில்

கிரெடிட் ஸ்கோர்: 750 அல்லது அதற்கும் மேல்

வருமானம்: குறைந்தபட்சம் 5,000

இதையும் படிக்க:
Ola Layoffs: மறுசீரமைப்பு நடவடிக்கை.. 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா நிறுவனம்?

விளம்பரம்

பர்சனல் லோன் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பது எப்படி?

  • உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் 750க்கும் அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

  • உங்கள் கிரெடிட் அறிக்கையில் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.

  • உங்களுக்கு நிலையான வருமானம் இருப்பது அவசியம்.

  • ஏற்கனவே இருக்கும் கடன்களுக்கான பேமெண்ட்களை செலுத்தி விடுங்கள்.

  • கடன் பெறுபவருக்கு இருக்க வேண்டிய அடிப்படை வயது, வருமானம் போன்ற தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

.



Source link