பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான விவோ, கடந்த மாதம் புதிய Vivo Y19s மொபைல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மொபைலின் விலை மற்றும் சிறப்பம்சங்கள், எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் விவோ நிறுவனம் Y19s மொபைலின் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் விலை பற்றிய முக்கிய விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் புதிய Vivo Y19s மொபைலானது 4GB மற்றும் 6GB ரேம் வேரியன்ட்ஸ்களிலும், 128GB வரையிலான ஸ்டோரேஜிலும் வரும் என்பதை Vivo நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விலையை பொறுத்தவரை இந்தியாவில் ​​இந்த ஸ்மார்ட் ஃபோனின் விலை தோராயமாக ரூ.9,800 முதல் துவங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

விளம்பரம்

ரேம், ஸ்டோர்ஜ் மற்றும் விலை விவரங்கள்: வரவிருக்கும் Vivo Y19s மொபைல் மொத்தம் மூன்று வேரியன்ட்ஸ்களில் அறிமுகமாக உள்ளது. இதன்படி 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை தாய்லாந்தில் THB 3,999 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.9,800)-ஆகவும், 128GB ஸ்டோரேஜூடன் வரும் 4GB ரேம் வேரியன்ட்டும் உள்ளது, இதன் விலை THB 4,399 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.11,000-ஆகும்.

இதையும் படிக்க:
ரெட் மேஜிக் 10 ப்ரோ+, ரெட் மேஜிக் 10 ப்ரோ உடன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ‘எக்ஸ்ட்ரீம் எடிஷன்’ சிப் அறிமுகம்

விளம்பரம்

இந்த மொபைலின் ஹை-வேரியன்ட் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது மற்றும் தாய்லாந்தில் இதன் விலை THB 4,999 ஆகும். இந்திய மதிப்பில் தோராயமாக இது ரூ.12,200 ஆகும்.

அம்சங்கள்: Vivo Y19s மொபைலானது 720 x 1,608 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 264 ppi பிக்சல் டென்சிட்டி கொண்ட 6.68-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 12nm octa-core Unisoc T612 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14-ல் இயங்குகிறது.

விளம்பரம்

Vivo Y19s மொபைலானது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது, இதில் f/1.8 aperture-உடன் கூடிய 50MP பிரைமரி சென்சார் மற்றும் f/3.0 aperture-உடன் கூடிய 0.08-MP டெப்த் சென்சார் உள்ளிட்டவை அடங்கும். இதன் ஃப்ரன்ட் கேமராவில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 5MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
பேடிஎம்மில் புதிய UPI ஸ்டேட்மென்ட்… யூஸ் பண்ணுவது எப்படி?

இந்த டிவைஸ் 5,500mAh பேட்டரிபேக் கொண்டுள்ளது இது 15W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களில் சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் அடங்கும். இந்த மொபைல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP64 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

விளம்பரம்
“சிவன் கோயிலில் ராஜ ராஜ சோழன் சிலை” – கம்பீரமாக காட்சி தரும் சோழ மன்னன்.!


“சிவன் கோயிலில் ராஜ ராஜ சோழன் சிலை” – கம்பீரமாக காட்சி தரும் சோழ மன்னன்.!

வரவிருக்கும் இந்த மொபைலில் இருக்கும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்டவை அடங்கும். இந்த மொபைலின் மொத்த எடை 198 கிராம். கிளேசியர் ப்ளூ, க்ளாஸி ப்ளாக் மற்றும் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

.



Source link