தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பசறை, ஹாலி-எல ஆகிய பகுதிகளிலும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர ஆகிய பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திலும், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல மற்றும் ரத்தோட்ட பகுதியிலும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த பிரதேசங்களிலும் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு குறித்த முன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



Source link