சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் யூஸர்களை கவர இந்தியாவில் விலையை அதிகரிக்காமல் மேக்புக் ஏரின் எம்2/எம்3 மாடல்களை மேம்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் சந்தையில் புதிய எம்4 மேக்புக் ப்ரோவை (M4 MacBook Pro) சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால் ஆப்பிளின் தற்போதைய முக்கிய செய்தி என்னவென்றால், ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் மேக்புக் ஏர் மாடல்களை மேம்படுத்தி வெளியிட்டிருப்பது தான்.

அதாவது, ஆப்பிள் நிறுவனம் தற்போது 16ஜிபி ரேம் கொண்ட மேக்புக் ஏர் எம்2 (MacBook Air M2) மற்றும் எம்3 (MacBook Air M3) மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது மார்க்கெட்டில் கிடைக்கும் 8ஜிபி ரேம் மாடலின் அதே விலையில் கிடைக்கும்.

விளம்பரம்

பெரும்பாலான மக்கள் மேக்புக் ஏரின் அடிப்படை ரேம் மாடலிலேயே மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதிக செயல்திறன் கொண்ட மாடல்களை பயன்படுத்தும் யூஸர்கள் இன்னும் மேம்பட்ட வெர்ஷனை எதிர்பார்த்தனர். ஏனெனில், இந்த வெர்ஷனுக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டியிருந்தது. ஆப்பிள் தனது சமீபத்திய மாற்றங்கள் மூலம் இந்த பிரச்சனையை தீர்த்துள்ளது.

நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்.!


நீங்கள் புறக்கணிக்கக் கூடாத கல்லீரல் பாதிப்பின் 5 அறிகுறிகள்.!

2024 இந்தியாவில் ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மற்றும் எம்3 16ஜிபி ரேம் விலை

* 16ஜிபி ரேம் கொண்ட ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2-வின் 13 இன்ச் மாடல் ரூ.99,900 க்கும் மற்றும் இது 256ஜிபி எஸ்எஸ்டி (SSD) இன்டர்னல் ஸ்டோரேஜூடனும் கிடைக்கும்.

விளம்பரம்

* 256 ஜிபி கொண்ட 13 இன்ச் எம்3 மாடலின் விலை ரூ. 1,14,900 முதல் தொடங்குகிறது.

* 24 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட எம்3 மாடலின் விலை ரூ.1,54,900 வரை செல்கிறது.

* 16 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 15 இன்ச் கொண்ட மேக்புக் ஏர் எம்3 ரூ. 1,34,900க்கு வருகிறது.

* 24 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எம்3 மாடல் ரூ. 1,74,900 க்கு கிடைக்கும்.

விளம்பரம்

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2/எம்3 அம்சங்கள்:

எம்2 சிப் மூலம் இயங்கும் மேக்புக் ஏர் ஒரு நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் மேக்சேஃப் (MagSafe) சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது, அதே நேரத்தில் இதன் வடிவமைப்பு ப்ரோ பதிப்பைப் போலவே உள்ளது. எம்2 சிப் கொண்ட மேக்புக் ஏர் ஆனது 13.6-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 1080p ஃபேஸ்டைம் எச்டி (HD) கேமரா, நான்கு-ஸ்பீக்கர்கள் கொண்ட ஒலி அமைப்பு, 18 மணிநேர பேட்டரி ஆயுள் மற்றும் மேக்சேஃப் (MagSafe) சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
யூடியூப் கிரியேட்டர்களுக்கு செம ஜாக்பாட் அறிவிப்பு… இந்தியாவுக்கு வந்தாச்சு ‘ஷாப்பிங் திட்டம்’

மேக்புக் ஏரின் முக்கிய அப்டேட், அதில் 16ஜிபி ரேம் இணைக்கப்பட்டதே ஆகும். இதன்மூலம் ஆப்பிளின் எம்2/எம்3 மாடல்களின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டதுடன், ஒரே நேரத்தில் பல்வேறு டாஸ்குகளை இயக்க இது வசதியாக உள்ளது. மேலும் இதில், புதிய சிப்செட் இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், இது நீண்ட பேட்டரி ஆயுளையும் உறுதி செய்கிறது.

எனவே, மேற்குறிப்பிட்ட இந்த விலையில், எம்2 மற்றும் எம்3 மேக்புக் ஏர் 16ஜிபி ரேம் கொண்ட மாடல் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது.

விளம்பரம்

.



Source link