பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி மறுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்துள்ளது. மேலும், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த வேண்டும் என ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்தது.
ஆனால், தொடரை நடத்தும் உரிமையை பெற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர், இஸ்லாமாபாத், ஸ்கர்டு, ஹன்சா மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்தது.
இதில், ஸ்கர்டு, ஹன்சா, முசாபராபாத் பகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளன. இதற்கு கடும் எதிர்வினையாற்றிய இந்திய கிரிக்கெட் வாரியச் செயலாளர் ஜெய் ஷா, சாம்பியன்ஸ் கோப்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கொண்டுசெல்வதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாம்பியன்ஸ் கோப்பை சுற்றுப்பயணம் நடத்தக் கூடாது எனவும் ஐசிசிக்கு வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க – ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை… குவியும் வாழ்த்து!
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணையை விரைவில் வெளியிடவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது
.