பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம் எது? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
ஒரு நாட்டில் செக்ஸ் டூரிஸத்திற்கான முக்கிய காரணம் வறுமை என்று கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வேலைவாய்ப்புகள் இல்லாதது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொழில்மயமான ஜப்பான், பாலியல் சுற்றுலாத் தலமாக உயர்ந்து வருவது தான். இது சமூகப் பொருளாதாரக் கூறுகளையும், வளர்ந்த நாடான ஜப்பானின் நிலைப்பாடு ஆபத்தில் உள்ளதா? என்பதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
இருப்பினும், வளர்ந்த நாடான ஜப்பான், ஆசியாவில் பாலியல் சுற்றுலா மையமாக உருவாகி உள்ளது. ஜப்பான் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை பெற்றது. மேலும், வெளிநாட்டு நாணயத்தை ஈர்த்தது. இருப்பினும், நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. நன்றாக சம்பாதிக்கும் ஜப்பானிய ஆண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்த பெண்களுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டிருந்தனர். ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஆண்களை ஈர்க்கும் வகையில், டோக்கியோ இப்போது பாலியல் சுற்றுலாவுக்கான இடமாக மாறியுள்ளது.
Also Read:
“இந்த இரண்டு நாடுகளை தாக்க எங்களுக்கு உரிமை உள்ளது” – ரஷ்ய அதிபர் புதின் பரபரப்பு பேச்சு!
ஜப்பான் Liaison Council Protecting Youths-ன் (Ciboren) பொதுச் செயலாளர் யோஷிஹிட் தனகா, தற்போதைய சூழ்நிலை குறித்து விளக்கியுள்ளார். அதில், ஜப்பான் ஒரு ஏழை நாடாக மாறிவிட்டது என்றும், தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இங்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறியுள்ளார்.
அதிகளவில் வெளிநாட்டு ஆண்களை பார்ப்பதாகவும், அவர்கள் பல நாடுகளில் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதில் பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்றும் அவர் கூறினார். இந்த வருகையால், இருபது வயதிற்குட்பட்ட பதின்ம வயதினரும் பெண்களும் உயிர்வாழ்வதற்காக பாலியல் தொழிலுக்குத் திரும்புவது கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது என்று தனகா கூறினார். மேலும், சமீப காலங்களில் டோக்கியோவின் கபுகிச்சோ மாவட்டத்தில் பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவதாக TokyoHive கூறியுள்ளது.
.