கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை கடத்திச் சென்ற சம்பவத்தின் சந்தேக நபர்கள் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியுடன் அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட மாணவியின் குடும்பத்தின் உறவுமுறை சகோதரரே குறித்த சந்தேகநபர் என பொலிஸார் கூறினர்.

 



Source link