தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும் குறித்த குற்றத்தை மறைப்பதற்காகவே, சந்தேக நபர் தமது மகளுடன் காதல் உறவு கொண்டிருந்ததாக கூறகிறார் எனவும் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

கெலிஓயா – தவுலகல – ஹபுகஹயடதென்ன பகுதியில் வேனில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 18 வயதான பாடசாலை மாணவியை அண்மையில் கடத்திச் சென்றிருந்தார்.

பின்னர் குறித்த மாணவி அம்பாறை பகுதியில் வைத்து நேற்று மீட்கப்பட்டதுடன் அவரை கடத்திய சென்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தம்மிடம் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த பணத்தைத் திருப்பித் தராததால் தாம் மாணவியைக் கடத்தியதாகவும் சந்தேக நபர் காவல்துறையினரிடம் அறிவித்துள்ளார்.

தாமும் கடத்தப்பட்ட மாணவியும், காதல் உறவு கொண்டிருந்ததாகவும், தாம் வெளிநாட்டிலிருந்த போது மாணவியின் தந்தைக்கு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை வழங்கியுள்ளதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் தமது மூத்த சகோதரியின் மகன் என கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தம்மிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சந்தேகநபர் தமது மகளைக் கடத்தியுள்ளதாகவும் மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கோரி தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் கம்பளை நீதவான் நீதிமன்றில் இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வேன் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் காஞ்சனா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், இன்று காலை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபரையும் நாளை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், மாணவியின் தந்தையை பொலிஸ் காவலில் வைக்க வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் இன்று காலை கம்பளை ஜயமலபுர பிரதேசத்தில் தவுலகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் நசீர் அம்பாறை பிரதேசத்திலும், வேன் சாரதி மொஹமட் அன்வர் சதாம் கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தில் வைத்து தவுலகல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவியை கடத்த பயன்படுத்திய வேன் கம்பளை கஹடபிட்டிய பகுதியில் உள்ள கார் வாடகை இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதுடன், கடத்தல் சம்பவம் தொடர்பில் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் பரிசோதகர் சம்பத் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

பின்னர் அந்த வேன் பொலன்னறுவை பகுதியில் இருப்பது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளம் காணப்பட்டு பொலன்னறுவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அப்போது, ​​இந்த வேனில் வந்த பிரதான சந்தேகநபரும் மாணவியும் பஸ்ஸில் ஏறி மட்டக்களப்பு பகுதிக்கு சென்றுவிட்டு, இங்கு இருந்த அவரது உதவியாளர்கள் இருவரும் மீண்டும் கம்பளை பகுதிக்கு வந்துள்ளனர்.

பிரதான சந்தேக நபர், மாணவியின் தந்தையிடம் இருந்து ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் மற்றும் வேன் ஒன்றைக் கோருவது தொடர்பான குரல் நாடாவையும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

ஜப்பானில் பணிபுரிந்து இங்கு வந்த பிரதான சந்தேக நபர், இந்த மாணவிக்கு பணம் செலவழித்து வீட்டைக் கட்டியதாகவும், தந்தைக்கு வேன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், உண்மைகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபருடன் அம்பாறை மற்றும் கல்குடா பிரதேசங்களில் இரண்டு இரவுகள் தங்கியிருந்த போதிலும் தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் இன்று அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.



Source link