Last Updated:

பாப்கானுக்கு 18 விழுக்காடு வரை ஜிஎஸ்டி விதிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News18

55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாப்கானுக்கு 3 வகையிலான ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக கார்மெல் பாப்கானுக்கு 18 விழுக்காடும், உப்பு மற்றும் காரமாக இருக்கக்கூடிய பாக்கெட் செய்யப்பட்ட பாப்கானுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி.யும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேபோல் ‘Ready to eat’ எனப்படும் பாக்கெட் செய்யப்படாத பாப்கானுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட மற்றும் பழைய கார்களுக்கான ஜிஎஸ்டியை 12 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பேட்டரி கார்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய கார்களின் விலையும் கணிசமாக உயரும்.



Source link