மலையாள திரையுலகின் நடிப்பு அரக்கன் என்றால் சட்டென்று சொல்லிவிடலாம் அது ஃபகத் பாசில்தான் என்று… மலையாள படங்களில் தன் நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த ஃபகத் தமிழ் , தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார். அதன் அடுத்த நீட்சியாக தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் ஃபகத்.

மலையாள சினிமாவில் 20 வயதில் தனது பயணத்தை தொடங்கிய ஃபகத் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே நடிகை நஸ்ரியாவின் கணவராக தமிழ் மக்களுக்கு பரிட்சயமானார்.

விளம்பரம்

பின், நஸ்ரியா கணவர் என்னும் அடையாளத்தை தவிர்த்து, தனித்துவமான நடிப்பின் மூலம் இன்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் ரஜினியுடன் நடித்த வேட்டையன் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பெரிய ரீச் கொடுத்தது. மலையாளத்தில் வெளியான ஆவேஷம் இந்திய சினிமாவில் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதில் ஃபகத் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். இப்படி, அப்பா ஃபாசில் இயக்குநராக இருந்தாலும் தன் நடிப்பை மட்டுமே மூலமாக வைத்து இத்தனை பெரிய இடத்தை அடைந்திருக்கிறார்.

விளம்பரம்

News18

இன்று வெளியாகியிருக்கும் புஷ்பா 2 படத்திலும் வில்லனாக மாஸ் காட்டியிருக்கிறார். அந்தவகையில் தற்போது அவருடைய நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மாதவிடாய் நாட்களின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா.?


மாதவிடாய் நாட்களின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா.?

அதாவது ஃபகத் ஃபாசில் பாலிவுட்டில் தனது பயணத்தை துவங்கவுள்ளார். இயக்குநர் இம்தியாஸ் அலி படத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார். ஹீரோவா அல்லது வில்லனா என்பன போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவருக்கு ஜோடியாக அனிமல் பட ஹீரோயின் திரிப்தி டிம்ப்ரி நடிக்கிறார். 2025-ல் படத்திற்கான ஷூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஃபகத்திற்கு 2025 ஒரு நல்ல தொடக்கமாக அமைய போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விளம்பரம்

.



Source link