பாலிவுடின் முன்னணி நடிகரான சைஃப் அலி கான் இன்று(16) காலை அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகாலை 2:30 மணியளவில் கொள்ளையடிக்க வந்த ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.