துபாயை சேர்ந்த தொழிலதிபர், தனது மனைவி பிகினி உடையில் பாதுகாப்பாக குளிப்பதற்காக, தீவு ஒன்றை வாங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தங்கள் துணையின் மீதான அன்பை வெளிப்படுத்த புதுமையான வழிகளைக் கடைப்பிடித்து அதற்காக எதையும் செய்யும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம். தற்போது அப்படி ஒரு நிகழ்வு துபாயில் நடந்துள்ளது. 26 வயதான சௌதி அல் நடக், அவரது சமீபத்திய பதிவின் மூலம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த சவுதி அல் நடக், துபாய் தொழிலதிபர் ஜமால் அல் நடக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். துபாய்க்கு படிக்கச் சென்றபோது தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்தார். இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம், அவரின் ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மனைவிக்காக ஏராளமான பரிசுப் பொருட்களை வழங்கிய ஜமால் அல் நடக், தற்போது தனது மனைவி பிகினி உடையில் குளிப்பதற்கு ஆசைப்பட்ட நிலையில், அவருக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இது தனது கணவரின் சிறந்த பரிசு என்ற கேப்சனுடன் தீவின் வீடியோவை சௌதி அல் நடக் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க:
45 நாடுகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட கடிகாரங்கள் சேகரிப்பு… காரணம் கேட்டா ஆச்சரியப்படுவீங்க
அவரது மனைவி பிகினி அணிந்து பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்பதற்காக, அவர் 50 மில்லியன் டாலர்களுக்கு மேல் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.418 கோடி செலவழித்து தனியார் தீவை வாங்கியுள்ளார். தனிமை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தீவின் சரியான இடத்தை வெளியிடப்படவில்லை என்றாலும் அந்த தீவு ஆசியாவில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌதிஅல் நடக்-ன் பிறந்தநாளன்று அவரது கணவர் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததாக சௌதி அல் நடக் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த விடியோவானது இணையதளத்தில் வைரலாகி 24 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு யூசர் கூறியதாவது, காதலுக்காக ஆண்கள் செய்யும் விஷயங்கள் என்று கூறியுள்ளார். இரண்டாவது யூசர் கூறியதாவது, ரியல் மென் மற்றும் இந்த ஆண்டின் சிறந்த கணவர் என்று கூறியுள்ளார். மூன்றாவது யூசர் கூறியதாவது, அவரைப் போன்ற கணவர் நமக்கு ஏன் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். நான்காவது யூசர் கூறியதாவது, எனக்கு அவரைப் போன்ற ஒரு கணவர் வேண்டும் என்று கூறியுள்ளார்.
.