Last Updated:
புதிய விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு பிசிசிஐ என்ன தண்டனை வழங்கும்? விதிவிலக்கு கோருவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் வீரர்களுக்கு கடுமையான 10 அம்சக் கட்டுப்பாட்டு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை மீறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிசிசிஐ உடனான ஆய்வுக் கூட்டத்தில் இந்தக் கொள்கைகளை முன்மொழிந்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறத் தவறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு பிசிசிஐ என்ன தண்டனை வழங்கும்? விதிவிலக்கு கோருவதற்கான வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்தான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: சமாஜ்வாதி பெண் எம்.பி.யுடன் ரிங்கு சிங் திருமணம்..? மௌனம் கலைத்த எம்.பி.யின் தந்தை
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் கூறியதாவது, “தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளரின் ஒப்புதலுடன் வீரர்கள் இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு கோரலாம்” என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக “தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர்களின் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதற்குப் பொருத்தமானதாகக் கருதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்,” என்றும் பிசிசிஐ எச்சரித்துள்ளது.
தண்டனைகள்:
- ஊதியக் குறைப்பு: விதிமுறைகளை மீறும் வீரர்களின் ஒப்பந்த ஊதியம் அல்லது போட்டி கட்டணத்தில் குறைப்பு செய்யப்படலாம்.
- ஐபிஎல் தடை: இந்தியன் பிரீமியர் லீக் உட்பட பிசிசிஐ நடத்தும் அனைத்து போட்டிகளிலும் விளையாடத் தடை விதிக்கப்படலாம்.
10 அம்சக் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்.
- அணியுடன் பயணிக்க வேண்டும்.
- குடும்ப பயணத்திற்கு கட்டுப்பாடு.
- கூடுதல் உடைமைகளுக்கு தடை.
- குறைந்த தனிப்பட்ட ஊழியர்கள்.
- உபகரண தளவாடங்கள்.
- சுற்றுப்பயணத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.
- பயிற்சி நேரத்தை முன்கூட்டியே முடித்துச் செல்லக் கூடாது.
- சுற்றுப்பயணத்தின் போது தனிப்பட்ட புகைப்படம் எடுக்கக் கூடாது.
- அதிகாரப்பூர்வ புகைப்படங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.
இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வீரர்களின் ஒழுக்கத்தையும், அணியின் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
January 18, 2025 12:37 PM IST