Last Updated:

விடா முயற்சி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியீட்டை தவிர்த்தது. இதையடுத்து மதகஜராஜா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு கொண்டு வரப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.

News18

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படத்தின் வெளியீடு ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

மேலும் படத்தை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். அதற்கான புரமோஷன் வேலைகளும் நடைபெற்று வந்தன இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கின்றனர்.

அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி டிராகன் படம் வெளியாகும் என்று தற்போது அறிவித்திருக்கின்றனர். அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், டிராகன் திரைப்படத்தின் வெளியீடு தள்ளி சென்று இருக்கிறது.

ஏற்கனவே தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மீது என்னடி கோபம்’ திரைப்படமும் பிப்ரவரி 7ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி போனது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தின் வெளியிடும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க – நெல்லை இசை நிகழ்ச்சி வரவேற்பால் இளையராஜா உற்சாகம்… புதிய அறிவிப்பை வெளியிட்டார்..

விடா முயற்சி திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் வெளியீட்டை தவிர்த்தது. இதையடுத்து மதகஜராஜா உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு கொண்டு வரப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.



Source link