கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தை பிரபல இந்தி நடிகர் வியந்து பாராட்டியுள்ளார். இந்த படத்தைப் பார்த்து அழுததாக அவர் தெரிவித்த நிலையில் அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கார்த்தி உடன் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இருவரும் இணைந்து நடிப்பது என்பது இதுவே முதன் முறையாகும்.

விளம்பரம்

மேலும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ்கிரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஃபீல் குட் திரைப்படமாக மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் வெளியான வித்தியாசமான படங்களை ஒன்றாக இந்த திரைப்படம் அமைந்தது.

குறிப்பாக கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமிகளை காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

தியேட்டர் ரிலீஸை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் மொழி மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – இந்திய சினிமாவில் அதிவேகமாக ரூ. 500 கோடி வசூலித்த முதல் படம்… புஷ்பா 2 திரைப்படம் சாதனை 

அந்த வகையில் பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பார்த்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்திய திரை உலகின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான அனுபம் கெர் மெய்யழகன் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

விளம்பரம்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது- “மெய்யழகன் திரைப்படத்தை பார்த்தேன். என்ன ஒரு சிறப்பான படம் அது!! மிகவும் எளிமையான, அழகான, கவிதை போன்ற திரைப்படம். அந்தப் படத்தை பார்த்து அதிகம் அழுதேன். என்னுடைய நண்பர்கள் அரவிந்த் சுவாமியும், கார்த்தியும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். படத்தில் பணியாற்றிய அனைவரும் மிக சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் குறிப்பாக இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

தற்போது அனுபவம் கெருடைய பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

.





Source link